Jul 16

எங்க தாத்தா குதிருக்குள்ள இல்ல - மாறன் சகோதரர்கள்

Tag: தமிழில் (in Tamil), SocietyKarthik @ 6:21 pm

சன்னுக்கும் (மு.க வின்) சன்னுக்கும் சண்டை வந்தாலும் வந்துச்சு, நிறைய உண்மைகள் வெளி வரத் தொடங்கியுள்ளன. சன் டிவி-யும் திரிக்கபடாத செய்திகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. (அதன் பழைய வேலையைத் தான் இப்போது கலைஞர் டிவி செய்கிறது. இந்த இடத்தில் சிலருக்கு இப்படி தோன்றலாம் - ஜெயா டி.வியை விடவா செய்திகளை திரிக்க முடியும். நான் ஒத்துக்குறேன். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயா டி.வியின் செய்திகளை விட சன் டி.வியின் செய்திகளை தான் உண்மைன்னு நம்பி கொண்டிக்கிறது நம்ம ஊரு. அப்படின்னா யாரு அதிகம் சேதாரம் பண்றது?)

இந்த பக்கத்தில் ஜூவியில் வந்த இது பற்றிய கட்டுரையை படிக்கலாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தி.மு.க. மற்றும் சன் குழுமம் எப்படியெல்லாம் தமிழகத்தை ஏமாத்தியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு மூத்த அமைச்சர் - ஆரம்பத்தில் `சுமங்கலி’யை ஆரம்பிக்க மாறன் சகோதரர்கள் எந்த வழியைக் கையாண்டார்களோ அதே வழியைத்தான் அழகிரியின் ராயல் கேபிள் விஷனும் கையாள்கிறது.
ஆக, சன்னும் இப்படித் தான் சுமங்கலியை விழுங்கினார்களா? அப்படின்னா அதுக்கு உடந்தையா இருந்தது அந்த கால தி.மு.க. ஆட்சியா?

தினகரன் வட்டாரம் - ஆரம்பத்தில், நாங்கள் போட்ட கருத்துக்கணிப்பை இன்றுவரை தவறு என்கிறார்கள். உண்மையில் அந்தக் கருத்துக் கணிப்புகள் ஒவ்வொன்றையும் கலைஞரின் ஒப்புதலுக்குப் பிறகே பிரசுரித்தோம்.
அப்படின்னா அதுக்கு பேரு கருத்துக் கணிப்பா இல்ல கலைஞர் கணிப்பா?

தினகரன் வட்டாரம் - கலைஞரின் நள்ளிரவுக் கைதின்போது, `கொல்றாங்க கொல்றாங்க’ என்ற கூக்குரலுக்குச் சொந்தக்காரரான தயாநிதி மாறனால் தலைவருக்கு ஒருபோதும் ஒரு கஷ்டமும் வராது.
இப்பவாவது உண்மை வெளி வந்ததே. நல்லா பண்றாங்கப்பா மிமிக்ரி.

தினகரன் வட்டாரம் - உண்மையைச் சொல்வது என்றால் தினகரன் ஊழியர்கள் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம். மாறன் சகோதரர்கள் வாங்கிய தினகரனில் கலைஞருக்குப் பிடிக்காத செய்தி ஏதாவது வந்து விட்டால், அவரே நேரடியாகப் போன் போட்டு காது கூசும் அளவுக்குத் திட்டுவது வாடிக்கை.
நல்லா இருக்கு, கலைஞரின் பத்திரிகை பாசம். தனக்கு சாதகமான செய்தி போட்டால் பாராட்டு, இல்லைன்னா திட்டு.

தினகரன் வட்டாரம் - தி.மு.க. ஆட்சி வருவதற்கு முன் ஜெயலலிதாவின் மிடாஸ் நிறுவனம் பற்றி கன்னாபின்னா வென்று பல குற்றச்சாட்டுகளைக் கூறிய தி.மு.க. நிர்வாகிகள், இப்போது கமுக்கமாக இருக்கக் காரணம் என்ன? மாதாமாதம் அவர்கள் கமிஷன் வாங்குவதைப் பற்றியோ, அல்லது ஒரு மூத்த அமைச்சர் அவ்வப்போது ரகசியமாக சசிகலாவைச் சந்திப்பதைப் பற்றியோ செய்தி போட்டால் அவர்கள் கோபப்படலாம். மாறாக தமிழக எதிர்க்கட்சித் தலைவியின் அறிக்கையை நாங்கள் வெளியிட்டதற்கு இத்தனை கோபமா?
இது புதுசா இருக்கே.

தினகரன் வட்டாரம் - அழகிரி ஏற்பாட்டில் கனிமொழியின் முயற்சியின் பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் அரைப் பக்கக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் எங்கள் நடுநிலையை அதாவது ஜெயலலிதாவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விமர்சித்து இருக்கிறார்கள்.
இவுங்க கத்திரி ஆங்கில பத்திரிகைகளுக்கும் போகிறதா?

இப்படி தான் தமிழகத்துக்கு திரித்த செய்திகளை வழங்கியிருக்கிறார்கள். இனியாவது மக்கள் விழித்துக் கொண்டு இது மாதிரி பத்திரிகைகளையும் கட்சிகளையும் ஒதுக்க வேண்டும் (இது ஜெயா டி.வி. மற்றும் அதிமுகவுக்கும் பொருந்தும்). நம்மூரில் மட்டும் தான் இப்படி எல்லா துறைகளிலும்(வாசிக்க: சினிமா, ஊடகம், காவல்) அரசியல் புகுந்துள்ளது.

Spread the word:
    Digg del.icio.us Reddit StumbleUpon Technorati

Leave a Reply



Close
E-mail It